சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் தன் மனைவி சரோஜாவுடன் என்பவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்ற போது அவர் சென்ற ஆட்டோவை மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். அவர்கள் வெளியூர் செல்வதை அறிந்த அந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 2 லட்சரூபாய் மதிப்பிலான வைர தோடு, சுமார் 40 சவரன் நகை, 2 கைகடிகாரங்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்து 4 நாளில் , நீலாங்கரையில் உள்ள அமெரிக்க தம்பதி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லை என நினைத்த கொள்ளையர்கள், உரிமையாளர் ஜெர்ரியை கண்டதும் அவரை தாக்கியுள்ளனர். இதை கண்ட ஜெர்ரியின் மனைவி, தனி அறையில் சென்று கதவை தாழிட்டுகொண்டு காவல்துறைக்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கருப்பு, சுரேந்தர் என இருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுகுமார், முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர்.