தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர்..திடீரென கூட்டத்திலிருந்து ஓடி வந்து பிரதமருக்கு ஷாக் கொடுத்த சிறுமி

தந்தி டிவி

டெல்லியில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

டெல்லியில் நேற்று மாலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு வேஷ்டி அணிந்து வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்கண்ட் ஆளுநர் சி.பிராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். பிரதமருடன் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் வந்தனர்.

விழாவில், பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோரும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, டி.சிவா, ஐசரி கணேஷ், நடிகை ராதிகா சரத்குமார், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், தீனா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.

விழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முன்னிலையில், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பாடல்களைப் பாடி அசத்தினார். அவரை பிரதமர் மோடி ஆசிர்வதித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்