போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் மக்களின் அன்றாட போக்குவரத்து கேள்விக்குறியாகிய நிலையில், தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது..
குறைந்த அனுபவம், அரசு பேருந்தை கையாள்வதில் சிக்கல் என பல்வேறு காரணங்களால் தற்காலிக ஓட்டுநர்கள் இப்பவே கண்ணை கட்டுதே என்ற நிலைக்கு தள்ளப்பட.. பயணிகள் புலம்பாத குறையாக மாற்று வழி தேடிச்சென்றனர்.
அந்த வரிசையில், தூத்துக்குடியில் தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றது..பின்னர் பயணிகளை மற்றொரு பேருந்தில் ஏற்றி விட்ட நிலையில், அந்த பேருந்து எல்லா இடத்திலும் நிற்காது என்பதால் பயணிகள் பாதியிலேயே இறக்கி விடப்பட்டனர்.