தமிழ்நாடு

கடவுள் நிர்ணயித்த கடைசி நாள்.. ஒரே மணி நேரம் தான்..அனுதினம் அவஸ்தை படும் மகன் கோரிக்கை வைத்த தாய்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் கேகே. கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். கூலி வேலை செய்து வந்த இவருக்கு, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எழுந்து நிற்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள அவர், இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில் பாக்யராஜுக்கு தேவையான மாத்திரைகள், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட மாத்திரைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடாவிட்டால், பாக்யராஜ் சுயநினைவை இழந்து விடுவதாக கூறும் அவரது தாயார், வேலூர் சென்று மாத்திரைகளை வாங்குவது கடும் சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். தனது மகனுக்கு தேவையான மாத்திரைகளை, திருப்பத்தூரிலேயே கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும், அவருக்கு சிகிச்சை அளிக்க முன் வர வேண்டுமெனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலங்குளம் - மாயமான மூதாட்டி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

Gold Rate Today| குறைந்தது இன்றைய தங்கம் விலை

Tiruchendur Speech| நள்ளிரவில் ஆக்ரோஷமான திருச்செந்தூர் கடல்.. 5 பேருக்கு நேர்ந்த சோகம்

Chennai| Viral Fever| சென்னையில் பேய் போல பரவும் `DENV' - டபுள் டபுளாக எகிறுவதால் மக்கள் பீதி

Sengottaiyan | TVK | ADMK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல்