தமிழ்நாடு

C.P.Radhakrishnan |கோவை வந்து இறங்கிய குடியரசு துணை தலைவர் - அமைச்சர் கொடுத்த அந்த புக் தான் ஹைலைட்

கோவை வந்து இறங்கிய குடியரசு துணை தலைவர் - அமைச்சர் கொடுத்த அந்த புக் தான் ஹைலைட்

thanthitv

கோவை வந்து இறங்கிய குடியரசு துணை தலைவர் - அமைச்சர் கொடுத்த அந்த `புக்’ தான் ஹைலைட்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ராஜேந்திரன் விஸ்வநாத் அர்லேகர், அமைச்சர் சம்பத், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது அமைச்சர் சம்பத், துணை குடியரசுத் தலைவருக்கு "ஜோசப் விஜய் – உன் பேரே வரலாறு"’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். வரவேற்பை ஏற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன், சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையையொட்டி கோவை விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

C.Vijayabaskar Complaint | ``என்னை ஏமாற்றிவிட்டார்’’ - C.விஜயபாஸ்கர் மீது அதிர்ச்சி புகார்

Nepal Flood | Tamil People | நேபாள பெருந்துயர் - தமிழகத்திற்கு பறந்து வந்த நல்ல செய்தி

DMK | தேர்தலுக்கு ரெடியாகும் திமுக - துணிந்து இறங்கும் மு.க.ஸ்டாலின்

#BREAKING || ImmanuelSekaran | Ramanathapuram | செப்.6-க்குள்.. பறந்த அதிரடி கட்டுப்பாடுகள்

Chennai Crime தமிழகத்தை அலறவிட்ட கூடுவாஞ்சேரி மனித கறி பிரியாணி - இவன் தான் அந்த அரக்கன்