மகளின் காதலால் நடந்த விபரீதம்.. பெண்ணின் தாய், சகோதரன் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விரக்தியில் தாயும், மகனும் கிணற்றில் குதித்து உயிரை விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிக்கிரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான பிரியா என்ற பெண் அதே ஊரை சேர்ந்த திருப்பதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து பிரியாவுக்கு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வேறொருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பிரியா தன் காதலன் திருப்பதியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மகளின் தற்கொலை முயற்சியை அறிந்த தாய் அம்சவேணி, தன் மகள் த்ரிஷா, மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து கிணற்றில் குதித்தார். இதில் அம்சவேணியும் விஷ்ணுவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட த்ரிஷாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.