தமிழ்நாடு

கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சிறைத்துறை டிஐஜி ராஜலெட்சுமி வீட்டில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அப்போது அவரது வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு சிறை காவலர்களுக்குச் சம்மன் அளித்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் பல அதிர்ச்சி தகவல்களைக் சிறைத்துறை காவலர்கள்

கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சிறைத்துறை டிஐஜி ராஜலெட்சுமிக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்த இருப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு