தமிழ்நாடு

"அவரு எப்புடி பேசுவார்னு உங்களுக்கு தெரியாதது இல்ல - "சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விவகாரம் ..ராதிகா...

தந்தி டிவி

இதுதொடர்பாக, நடிகை ராதிகாவின் மேலாளர் நடேசன் அளித்துள்ள புகாரில், கடந்த மாதம் 15ஆம் தேதி, காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக, அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பிரசாரம் செய்ததாகவும், அப்போது ராதிகா மற்றும் சரத்குமார் குறித்து அவர் மிகவும் இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவித ஆதாரமும் இன்றி இந்து மத உணர்வுகளை இழிவு படுத்தும் விதமாகவும், ராதிகா மற்றும் சரத்குமாரின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் விதமாகவும் பிரசாரம் செய்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடேசன், காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும், தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Manickam Tagore | "ஆட்சியில் பங்கு" - மீண்டும் வெடித்த மாணிக்கும் தாகூர்

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்