சிதம்பரம் அருகே பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ள கீழ்அனுவம் பட்டு கிராமத்தின் சாலையோரமாக குடுகுடுப்பை மற்றும் ஜோசியம் பார்க்கும் மக்கள் பலர் சிறிய குடில்கள் அமைத்து தங்கி இருந்தனர். ஊரடங்கால் மக்கள் யாரும் தெருவுக்குள் அனுமதிக்காததால், உணவின்றி தவித்து வந்த இந்த மக்கள் குறித்து தந்தி டி.வி நேற்று செய்தி வெளியிட்டது. இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் பலர், தானாக முன்வந்து, அந்த மக்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள், அரசி, பால் என அனைத்தையும் வழங்கிவிட்டு சென்றுள்ளனர். பல நாட்களாக பசியால் வாடிய அந்த மக்கள், தந்தி டி.வி-யால் பசியாறியுள்ளதாக அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.