தமிழ்நாடு

Kanniyakumari || தந்தி டிவி செய்தி எதிரொலி - களமிறங்கிய மாவட்ட ஆட்சியர் பிரதாப்

தந்தி டிவி செய்தி எதிரொலி - களமிறங்கிய மாவட்ட ஆட்சியர் பிரதாப்

thanthitv

Kanniyakumari || தந்தி டிவி செய்தி எதிரொலி - களமிறங்கிய மாவட்ட ஆட்சியர் பிரதாப்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக, கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பாலாமடம் மற்றும் ஏலாக்கரை பகுதிகளில் சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியது குறித்துத் தந்தி தொலைக்காட்சியில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப், நகராட்சி ஆணையர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நீரோடை ஆக்கிரமிப்புகள் மற்றும் சிலாப்புகள் அகற்றப்பட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றும் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகளின் இந்த விரைவான நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் தந்தி டிவிக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

#kanniyakumari #district #collector #pratab

Breaking | Annamalai | ``6 மாசம் தூங்கிட்டு இருந்தீங்களா?'' | இறங்கி அடித்த அண்ணாமலை

Breaking | CM Vijay | "இளம் வீரர்களுக்கு நம்பிக்கை" | பாராட்டிய CM விஜய்

Breaking | CM Vijay | Asian Games | தங்கம் வென்ற தங்கமகன் | அறிவித்தார் CM விஜய்

Breaking | Storm | TN Rains | புதிய புயலின் பெயர் இதுதான் | நாளையே வருகிறதா?

Breaking | PM Modi | Netanyahu | போன் போட்ட நெதன்யாகு | தீர்வை சொன்ன பிரதமர் மோடி