Thanjavur || தொடர் விடுமுறையால் தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர். மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலின் வியக்கத்தக்க கட்டடக்கலையையும், பிரம்மாண்ட சிற்பங்களையும் அவர்கள் பார்த்து ரசித்தனர். கோவில் நுழைவுவாயில் மற்றும் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.