முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது... சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், ஒன்பதாம் நாள் விழாவாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது . வள்ளி ,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்... இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்...