Thanjavur | Car Accident | வந்த வேகத்தில் மரத்தில் மோதி சிதறிய கார் - தஞ்சையில் அதிர்ச்சி
கார் மரத்தில் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியலூர்–தஞ்சை சாலையில் கண்டியூர் அருகே கார் சாலை ஓர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் அம்மன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஊர் திருவிழாவிற்காக திருவையாறில் பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது