தமிழ்நாடு

Thanjavur | 80 ஆண்டுகளுக்குப் பின் பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடிமரம்

Thanjavur | 80 ஆண்டுகளுக்குப் பின் பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடிமரம்

thanthitv

Thanjavur | 80 ஆண்டுகளுக்குப் பின் பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடிமரம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சிவபுரம் சிங்காரவல்லி சமேத சிவகுருநாத சுவாமி கோயிலில், 80 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், 27அடி உயர வேங்கை மரத்தால் செய்யப்பட்ட கொடிமரம் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களுடன் நிறுவப்பட்டது. முன்னதாக விசேஷ ஹோமம், வாசனை திரவிய அபிஷேகம் மற்றும் கட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் ஒன்றிணைந்து கொடிமரத்தை தூக்கி நட்டு பிரதிஷ்டை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் நமசிவாய”என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கொடிமர பிரதிஷ்டை விழா பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்