தமிழ்நாடு

காவல்கிணறு பகுதியில் 2 நாட்கள் காத்திருந்தால், 2 குடம் தண்ணீர்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தண்ணீருக்கு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி

காவல்கிணறு ஊராட்சியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவை வறண்ட நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மட்டுமே கைகொடுத்து வருகிறது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது, லாரிகள் மூலம் அவ்வப்போது வழங்கப்படுகிறது. எப்போது, தண்ணீர் வழங்கப்படும் என தெரியாததால், 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ஊராட்சி நிதியில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாதந்தோறும் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், முறையாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்