தமிழ்நாடு

"தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் நிலை..!" சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு | Tenkasi

தந்தி டிவி

தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயில் பராமரிப்பு இன்றி இருப்பதாக, மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேதனை தெரிவித்துள்ளார். தென்காசி வந்த அவர், காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் புதிய இளம் வாக்காளர்களுடன் சேர்ந்து கலந்துரையாடிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்ற சிவராஜ் சிங் சவுகான், தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலை பராமரிக்காமல் போட்டுள்ளதை கண்டு, தனக்கு மிகந்த மனவேதனை ஏற்பட்டதாகவும் கூறினார்.

Byelection தாராபுரம் இடைத்தேர்தல் - கலெக்டர் கண் முன்னே.. பரபரப்பு ஆய்வு

BREAKING || தமிழகத்தின் பிரமாண்டத்தை காட்டிய PM மோடி - ஒரு நொடி வியந்து பார்த்த ஜி ஜின்பிங்

``சட்டத்தில் எங்கேயுமே அப்படி இல்லை’’ அடித்து சொன்ன தமிழக அரசு.. கேட்டு உயர்நீதிமன்றம் எடுத்த முடிவு

Snake Bite | Minister VanniArasu | பாம்பு கடி... Min. வன்னிஅரசு ஆய்வுக்கு சென்ற இடத்தில் விபரீதம்

🔴LIVE : ADMK | By Election | EPS | கேம் சேஞ்சர் ஆகும் பை எலக்சன் - யார் கை ஓங்கும்?