தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த 2 நாட்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒன்பது லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 9 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதனை சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.