ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை 3 பாடங்களுக்கு மட்டும் நடைபெறுகிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன .ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் எழுதவுள்ளது பள்ளிக்கல்வித் துறை புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு தேர்வை 2 லட்சத்து 90 ஆயிரத்து 683 மாணவர்கள் எழுதுகின்றனர். எட்டாம் வகுப்பு பொது தேர்வை 2 லட்சத்து 65 ஆயிரத்து 600 மெட்ரிகுலேசன் மாணவர்களும் என, மொத்தமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 283 மாணவர்கள் எழுதுகின்றனர்.