தமிழ்நாடு

ஒருமையில் பேசிக்கொண்ட பெண் கவுன்சிலர்கள் - ஊராட்சி கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது. அப்போது, சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி குழு தலைவி தமிழ்செல்வியின் கணவர் போஸ் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து கவுன்சிலர் கனிமொழி கேள்வி எழுப்பினார். ஊராட்சி குழு தலைவர் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியபோது, ஊராட்சி குழு தலைவியின் ஆதரவு கவுன்சிலர்கள் கடும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவருக்கொருவர் மாறிமாறி ஒருமையில் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டத்தை புறக்கணித்துக்கொண்டு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி வெளியேறினார்.

Tamilnadu Police | காவல்துறையின் பவர்புல் அதிகாரிகள் அதிரடியாக Transfer

Janyayan movie | ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் - ஒழுங்கு நடவடிக்கை குறித்து வெளியான முக்கிய செய்தி

Mumbai Train Death | கதவை மூடுவதில் தகராறு..ஓடும் ரயிலில் இளைஞர் கொடூர கொ*ல

Private school fees | தனியார் பள்ளி கட்டண விவகாரம் - வெளியான முக்கிய அப்டேட்

Iran | Indian Embassy | ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி