அரசு போக்குவரத்து கழக பணிமனையின் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 775 பேருந்துகளின் வாகன தகுதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணிக்கு வரும் ஊழியர்கள், முகக்கவசம், கையுறைகளை அணிய வேண்டும் என்பனஉள்ளிட்ட வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.