தமிழ்நாடு

மறைமுக தேர்தல் முடிவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த மறைமுக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த மறைமுக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் அனைத்திலும் திமுக வெற்றி பெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கான

தேர்தலில் - திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், விசிக -1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 74 ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான பதவிகளில் - திமுக 68 இடங்களிலும், அதிமுக மற்றும் மதிமுக தலா 1 இடத்திலும் வெற்றி பெற்ற நிலையில் 74 ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக 62 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் தேர்தல் குறைபாடு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 8 இடங்களில் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தற்செயல் தேர்தலில் - திமுக 4 இடங்களிலும், காங்கிரஸ்1 இடத்திலும் வெற்றி பெற்ற நிலையில் ஒரு இடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. 13 ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தற்செயல் தேர்தலில் திமுக 7 இடங்களிலும், அதிமுக, பாமக, சுயேட்சை ஆகியவை தலா 1 இடத்தில் வெற்றி பெற்ற நிலையில் 3 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்