தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை ஆயிரத்து 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 38 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி மூலமாக பணப்பட்டுவாடா தொடர்பான 76 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மதுமகாஜன் இன்று தமிழகம் வர உள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறினார்.