Tambaram | அத்துமீறிய இளைஞரை தட்டிகேட்டவர்கள் கைது? - ஆத்திரத்தில் பெண்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய வடமாநில இளைஞரை தட்டிக்கேட்ட இளைஞர்களை கைது செய்யப்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த பெரியார் நகரில், வசிக்கும் பெண் வருவரிடம் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த வடமாநில தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர் இதனிடையே, தன்னை தாக்கியதாக வடமாநில தொழிலாளரி கொடுத புகாரில் அந்த பகுதியைச் சார்ந்த 4 இளைஞர்கள் கைது செய்துள்ளனர். இதை கண்டித்து தாம்பரம் கிஷ்கிந்தா சாலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.