தமிழ்நாடு

மக்களை கவர்ந்த 5 ரூபாய் மருத்துவருக்கு பாராட்டு விழா

தாம்பரத்தில், குறைந்த கட்டணத்தில் சேவை செய்து மக்களை கவர்ந்த 5 ரூபாய் மருத்துவருக்கு மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.

தந்தி டிவி
தாம்பரத்தில் நடந்த விழாவில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் சேஷகிரியின் மருத்துவ சேவையை பாராட்டி, அவருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினர். தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சேஷகிரி, கடந்த 40 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். ஏழைகள் செல்ல முடியாத அளவுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் உயர்ந்து விட்ட தற்போதைய நிலையில், குறைந்த கட்டணத்தில் சேவை செய்யும் மருத்துவர் சேஷகிரியை தெய்வத்திற்கு நிகராக மக்கள் பார்க்கின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே