தமிழ்நாடு

திடீரென திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு..! நள்ளிரவில் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரகாஷ். திமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நிலையில், அவரது மனைவி குன்னத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் நேற்று (நவ.22) மதியம் 1 மணியளவில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். நள்ளிரவிலும் சோதனை நடைபெற்ற நிலையில், ராஜபிரகாஷிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மகளுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு இவர் சென்னையில் நிலம் வாங்கி கொடுத்ததாகவும் தெரிகிறது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்