வடக்கு பொய்கை நல்லூரில், ஊராட்சி தொடக்கப்பள்ளியில்
தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இசபெல்லாஜூலி என்ற ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து தகவலறிந்த மாணவர்கள், ஆசிரியையை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இக்காட்சி, காண்போர் மனதை கரைய வைத்தது.