தமிழ்நாடு

தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை - பரபரப்பு

தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை - பரபரப்பு

thanthitv

பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தற்கொலை - பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த கார்த்திக்-மகாலட்சுமி தம்பதியின் 15 வயது மகள், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

விடுதியில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் இதர ஆதாரங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sonam Wangchuk Protest | ஏற்கப்பட்ட சோனம் வாங்சுக்கின் கோரிக்கை

CM Vijay | TNPSC காலி பணியிடங்கள்.. முக்கிய முடிவு எடுக்கும் CM விஜய்

Palani Temple Land | CB-CID | பழனி கோயில் நில மோசடி விசாரணை - கோர்ட்டுக்கு சென்ற வெள்ளத்துரை

Therukural Arivu| தலைமை செயலகம் முன்பு நின்று கத்திய பாடகர் அறிவு - இழுத்து வேனில் ஏற்றிய போலீஸ்

Breaking | Tenkasi | Crime | பஸ் ஸ்டாண்ட் அருகே தலையின்றி கிடந்த இளைஞர் சடலம் | தென்காசியில் கொடூரம்