தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - உச்சநீதிமன்றம் சொன்ன தகவல்

தந்தி டிவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது...ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான இறுதி விசாரணை, ஆகஸ்டு 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்க தொடங்கியதால், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்தது. காஷ்மீர் விவகாரம் முடிவடைந்த பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மனு விரைவில் பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BREAKING | DMK | தொகுதி பங்கீடு - கூட்டணிகளுக்கு திமுகவின் முக்கிய சேதி

Breaking | Vijay | TVK | வெகுண்டெழுந்த விஜய்.. பரபரப்பு ஆவேச பதிவு

Breaking | ECI | TN Election | ``பிப். 17..'' | தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட்

Breaking | CM Stalin | முக்கிய மீட்டிங்கில் CM ஸ்டாலின் | தமிழ்நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு?

TVK "விஜய்யை காட்டி திமுகவில் பேரம்... பிடிவாதமாக காங். கேட்கும் ஷேரிங்" - ஓபனாக உடைக்கும் சுபேர்