ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 27 ஆண்டுகளுக்கு மேல், இந்திய ஆட்சிப்பணியில் நேர்மையாக பணியாற்றியவர் என்றும் பத்திரிகை, இலக்கியம், அறிவியல் துறைகளுக்கு அரிய கருத்துகளை தந்தவர் எனவும் ஐராவதம் மகாதேவனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த திமுக ஆட்சியின்போது, அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ள ஸ்டாலின், ஐராவதம் மகாதேவனின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.