தமிழ்நாடு

15 ஆயிரம் கி.மீ.. சைக்கிள் மூலம் மதுரை வந்த இலங்கை ஆசிரியர்

தந்தி டிவி

இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் என்ற தனியார் பள்ளியில் ஆசிரியர், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தியும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 120 நாட்களில் சைக்கிளில் சுற்றி வர முடிவு செய்து ஜூலை 24ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பினார். ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா வழியாக நேற்று ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக இன்று காலை 8 மணிக்கு மதுரைக்கு அவர் வருகை தந்தார். அவருக்கு மதுரை வக்போர்ட் கல்லூரி அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து பணமுடிப்பு வழங்கினார். 

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு