தமிழ்நாடு

சி.பா. ஆதித்தனார் 114 - வது பிறந்த நாள் விழா : உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை

" தமிழர் தந்தை" சி.பா. ஆதித்தனாரின் 114- வது பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சி.பா. ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

" தமிழர் தந்தை " சி.பா. ஆதித்தனாரின் 114- வது பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் - ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சி.பா. ஆதித்தனாரின் சிலைக்கு, "தினத்தந்தி" நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன், "மாலை மலர்" இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன், பா. ஆதவன் ஆதித்தன் ஆகியோர், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே. மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி.சண்முகம் , சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் சி.பா. ஆதித்தனார் உருவச்சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

மதுரை - தினத்தந்தி அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

நெல்லை- தினத்தந்தி அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

சி.பா. ஆதித்தனாரின் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, ஊர் மக்கள் சார்பில்,

மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலைக்கு, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள்

மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்