சிவகங்கை மாவட்டம் பொத்தானேந்தல் கிராமத்தில் விவசாய கூலி வேலைக்கு செல்லும் வீராசாமி, தனது 80 வயது தந்தையான சேவுகனை கவனித்து வந்தார் குடிப்பழக்கமுடைய வீராசாமி, சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த தந்தை சேவுகனை அரிவாளால் வீராசாமி வெட்டி கொன்றுள்ளார் . போலீசாரிடம் தனது தந்தையை யாரோ வெட்டி கொலை செய்துவிட்டதாக வீராசாமி புகாரும் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் வீராசாமியே தனது தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.. 5 ஆண்டுகளாக தந்தையை பராமரித்து வந்த வீரசாமி, தொடர்ந்து பராமரிக்க முடியாமல் அவரை கொன்றது விசாரணையில்
தெரிய வந்துள்ளது.