காரைக்குடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேவி என்பவர், நள்ளிரவு 1 மணிக்கு வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கிய நிலையில், அதிகாலை 5 மணிக்கு ப்ரிதர்ஷனி என்பவர் வெற்றிபெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதை எதிர்த்து, தேவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, ப்ரியதர்ஷனி செல்லாது என்று பதவி ஏற்க தடைவிதித்தது. இதை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் ப்ரியதர்ஷனி ஆகியோர் உச்ச நீதிமன்றம் சென்றனர். விசாரணையில், மீண்டும் வாக்கு எண்ணிய பிறகே, ப்ரியதர்ஷனியின் வெற்றி பெற்றார் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. தேவி சார்பில் ஆஜரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதல் சான்றிதழ் வழங்கியவுடன் அதிகாரியின் வேலை முடிந்துவிட்டதாக கூறினார். வாதங்களை கேட்ட நீதிமன்றம், தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.