வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை 12 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை அதிக வாக்குகள் பெற்று முன்னேறி போவோம் என்றார்.