தமிழ்நாடு

School student | "விஜய் மாமா ப்ளீஸ் பஸ் விடுங்க" - கையெடுத்து கும்பிட்டு மழலை மொழியில் கேட்ட குழந்தைகள்

Schoolstudent | "விஜய் மாமா ப்ளீஸ் பஸ் விடுங்க"-கையெடுத்து கும்பிட்டு மழலை மொழியில் கேட்ட குழந்தைகள்

thanthitv

"விஜய் மாமா ப்ளீஸ் பஸ் விடுங்க.." - கையெடுத்து கும்பிட்டு மழலை மொழியில் கேட்ட பள்ளி குழந்தைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளிக்கு தினமும் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் பேருந்து வசதி கோரி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுகுளம் கண்மாய் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வசித்த குடும்பங்களுக்கு அரசு கல்லூரி அருகே புதிய குடியிருப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அந்தப் பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். பேருந்து வசதி ஏற்படுத்தித் தர பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் அவர்கள், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், "விஜய் மாமா ப்ளீஸ் எங்களுக்காக பேருந்து விடுங்கள்" என்று மாணவர்கள் மழலை மொழியில் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்