தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

தனியார் பள்ளிகள் தொடர்ந்த ஒரு வழக்கில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்றும், நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பு, டிசம்பர் முதல் தொடங்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. பாடத் திட்டங்கள் குறைப்பு தொடர்பாக, பத்து நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி