தமிழ்நாடு

பள்ளி கல்வி கட்டணம் செலுத்தும் விவகாரம் - 70 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்க கோரிக்கை

பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை மூன்று தவணைகளாக வசூலிக்க, தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.பேரிடர் மேலாண்மை சட்டப்படி அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி கோவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..