சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினிக்கு, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உணவு உட்கொள்ளாமல் சோர்வடைந்த அந்த யானைக்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் யானை குணமடைந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.