தமிழ்நாடு

வீசி எரியும் சிகரெட் துண்டுக்கு பணம் - உண்டியலில் சேகரித்து உரமாக்கும் இளைஞர்கள்

புகை பிடித்துக் கீழே வீசும் சிகரெட் துண்டுகளுக்கு, விலை நிர்ணயித்துள்ளது சேலம் இளைஞர் குழு

தந்தி டிவி

* சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ''குப்பைகாரன் குழு'' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள இளைஞர்கள், புகை பிடிப்பதால் ஏற்படும் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

* அதோடு, கடைகள் தோறும், வீசி எறியும் சிகரெட் துண்டுகளைச் சேகரிக்க, ''புகை உண்டியல்'' என்ற ஒரு பெட்டியைத் தந்துள்ளனர். அதில் சேகரிக்கப்படும் ஒரு கிலோ சிகரெட் துண்டுக்கு, விலையும் தருகின்றனர்.

* வீசி எறியும், எச்சில் சிகரெட் துண்டுகளை வைத்து என்ன தான் செய்யப் போகிறார்கள்...?

* புகைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகளால் மாசு ஏற்படுவதையாவது தடுக்கலாம் என்று களமிறங்கியுள்ளது இந்தக் குழு...

* ஒரு சிகரெட் துண்டு, 150 எம்.எல். நீரை உறிஞ்சி விடுகிறது என்பதும், அது, மக்குவதற்கு 60 நாட்கள் ஆகி விடுகிறது என்பதும் இவர்களின் கருத்து. சிகரெட் துண்டுகளால், நிலத்தடி நீர் மாசடைவது மட்டுமில்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாகவும் வேதனை படுகின்றனர்..

* பாதிப்பு இவ்வாறிருக்கு, இதைச் சேகரிப்பதால் பலனும் இருக்கிறது. புகையிலை மற்றும் காகித துண்டுகளை உரமாக பயன்படுத்த இயலும் என்கிறது இந்தக்குழு.

* ''குப்பைக்காரன் குழு'' இளைஞர்களின் நோக்கம் குப்பைகளை சேகரித்து மறுசுழச்சி செய்து, விற்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதே. இந்த முயற்சிக்கு, சேலம் மாவட்ட வியாபாரிகளும் ஆதரவளித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்