தமிழ்நாடு

வீடு ஏலம் - வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை புதுப்பிப்பதற்காக தனியார் வங்கி ஒன்றில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கொரோனா கால கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் வீடு ஏலம் விடப்பட உள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. அவர்கள் நேரில் சென்று 2 லட்சம் செலுத்திய நிலையில், கால அவகாசம் தருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறிய மறுநாளே, திடீரென வீடு ஏலம் விடப்பட்டுவிட்டதாக கூறிய வங்கி அதிகாரிகள் வீட்டை கையகப்படுத்த இன்று வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் குடும்பத்தினர் கால அவகாசம் தருவதாக தெரிவித்துவிட்டு மறுநாளே ஏலம் விட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்