தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ஐ.சி.சி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு

தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக, ஐ.சி.சி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த ரூபா குருநாத், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உட்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை, ரூபா குருநாத்துக்கு கிடைத்துள்ளது. துணை தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்