தேவர் குருபூஜையில் அலப்பறை.. 4 பேர் மீது வழக்குப்பதிவு
#thevarjayanthi #Namakkal #police #thanthitv
தேவர் குருபூஜை - போக்குவரத்துக்கு இடையூறு செய்த 4 பேர் மீது வழக்கு நாமக்கல்லில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பட்டாசுகளை அஜாக்கிரதையாகக் கையாண்டதாகவும் முக்குலத்தோர் புலிப்படை மாவட்டச் செயலாளர் சின்னமருது உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 29-ம் தேதி, முத்துராமலிங்கத் தேவரின் 119-வது குருபூஜையை முன்னிட்டு, நாமக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7 வாகனங்களில் வந்தவர்கள் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டுப் பசும்பொன்னுக்குச் சென்றனர். அப்போது ஊர்வலத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பட்டாசுகளையும் அஜாக்கிரதையாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சின்னமருது உட்பட 4 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.