Tiruvallur | Powercut | தொடர் கரண்ட் கட் - ஆத்திரமடைந்து நள்ளிரவில் ரோட்டில் இறங்கிய மக்கள்
#Tiruvallur #protest #powercut #thanthitv
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரில், சுமார் 3 மணி நேரம் நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கனரக லாரி மின் கம்பியை அறுத்ததால் மின்தடை ஏற்பட்டதாகவும், சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மின்சாரம் வழங்கப்பட்டதும் போராட்டம் கைவிடப்பட்டது.