கடலூர், சேத்தியாத்தோப்பு அருகே தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு மெடிக்கலில் மருத்துவம் பார்ந்ததால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல்காந்தி குடும்பப் பிரச்சினை காரணமாக எறும்பு மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராகுல்காந்தியை அப்பகுதி மக்கள் அவரை சேத்தியாத்தோப்பில் உள்ள மெடிக்கலுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சுமார் இரண்டு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி மெடிக்கலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த இளைஞர் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.