தமிழ்நாடு

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

தந்தி டிவி

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

ரசாயன திரவத்தை தவறுதலாக குடித்து உடல்நலம் பாதித்த செங்கோட்டை சிறுமி, உடல்நலம் தேறி முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, இசக்கியம்மாள் என்ற சிறுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக துணி வெளுப்பதற்கு பயன்படும் ரசாயன திரவத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் உடல் நலிவுற்ற சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது சிறுமி உடல்நலம் தேறிய நிலையில், பெற்றோருடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது சிறுமி இசக்கியம்மாளின் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்