ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலவாரிய அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணி புரியும் அண்ணாதுரை என்ற ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு ஈடுபடுவதாக கூறி, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையில் ஈடுபட்டனர்.