தமிழ்நாடு

பைக்கால் வீட்டுக்குள் புகுந்த 10 பேர்.. அவமானத்தில் உயிரை மாய்த்த கணவன்.. கை, கால் நடுங்கிய மனைவி

தந்தி டிவி

தனியார் நிதி நிறுவனத்தில் தவணைத் தொகை கட்டமுடியாமல் கணவர், தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தரக் கோரி, மனைவி, ராமநாதபுரம் ஆட்சியரிடம், மனு அளித்தார்.

சாயல்குடி அருகே உள்ளது நரிப்பையூர் இந்த ஊரைச் சேர்ந்த அமானுல்லா என்பவர் மனைவி ரமிலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர். அதில், தன்னுடைய கணவர் அமானுல்லா சாயல்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், இரு சக்கர வாகன கடன் பெற்றதாகவும், பெற்ற கடனுக்கு பெரும் பகுதியை தவணை செலுத்தி விட்ட பிறகும் சில தவணைகள் மட்டும் பாக்கி இருந்ததாக கூறியுள்ளார்.

குடும்ப சூழ்நிலையால் அவரால் தவணை கட்ட முடியாத நிலை இருந்தபோது, தனியார் நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்து சென்றதாகவும் கூறியுள்ளார். அதோடு கூடுதல் வட்டி கேட்டு அடியாட்களை வைத்து மிரட்டியால் தனது கணவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறியுள்ளார். எனவே தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வாங்கி தர கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்