தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

தந்தி டிவி

வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பாக, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சியான, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த அறிவிப்பை கூட்டாக வெளியிட்டனர். இவர்கள் மூவரும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்பு என கடந்த புதன்கிழமையன்றே தந்தி டிவியில் செய்தி ஒளிப்பரப்பானது குறிப்பிடத்தக்கது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு