தமிழ்நாடு

முதல்வரை ஜெயலலிதாவின் தம்பியாக மக்கள் பார்க்கிறார்கள் - ராஜேந்திர பாலாஜி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தம்பியாக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பார்ப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தம்பியாக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பார்ப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில், குருபெயர்ச்சியையொட்டி கோயிலில் வழிபாடு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரு பெயர்ச்சி அ.தி.மு.க.வுக்கு நல்ல ஏற்றத்தை தரும் என்றார். மேலும், இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும் ஆண்டுதோறும் பால் விலையை ஏற்றி, கொள்முதல் செய்பவர்களின் வயிற்றில் பாலை வார்ப்போம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்