TN Rain | வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - ஊரே மிதக்க தத்தளிக்கும் மக்கள்
#kallakurichi #tnrain #rainfall #flood #thanthitv
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், வடசெட்டியந்தல் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. நேற்று மாலை தொடங்கிய மழை, இரவு முழுவதும் நீடித்ததால் மாரியம்மன் கோயில் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால், குழந்தைகளுடன் இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்ததாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்கிய மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.